Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் சேரலைன்னா புல்டோசர் வரும்! – மிரட்டிய அமைச்சர்?

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (10:33 IST)
மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சியில் இணையாவிட்டால் புல்டோசர் வரும் என மிரட்டும் வகையில் அமைச்சர் பேசியதாக வெளியான வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஆட்சிக்காலம் முடிய உள்ள நிலையில் இப்போதே தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில் அம்மாநிலத்தின் பஞ்சாயத்து அமைச்சரான மகேந்திர சிங் சிசோடியா அங்குள்ள குணா மாவட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது பொதுமக்களை நோக்கி பேசிய அவர் “நீங்கள் அனைவரும் பாஜகவில் இணைந்து விடுங்கள். 2023 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகதான் ஆட்சி அமைக்கும். மாமாவின் புல்டோசர் தயாராக இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள்” என பேசியுள்ளார்.

முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை மாமா என மகேந்திர சிங் சிசோடியா பேசுவது வழக்கம். தங்கள் கட்சியில் சேராவிட்டால் புல்டோசர் வைத்து வீட்டை இடிப்போம் என எச்சரிக்கும் தோனியில் அமைச்சர் பேசியுள்ளதாக அவரது வீடியோவை ஷேர் செய்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments