பெண் பத்திரிகையாளரை அவமதித்த பா.ஜ.க. தலைவர்: கேரள பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

Siva
திங்கள், 22 செப்டம்பர் 2025 (16:42 IST)
கேரள மாநில பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர், ஒரு பெண் பத்திரிகையாளரை அவமதித்த சம்பவத்திற்கு, கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில், திருமாலா வார்டு கவுன்சிலர் கே. அனில்குமார், தனது அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து, ஒரு பெண் பத்திரிகையாளர், ராஜீவ் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பினார். 
 
அதற்கு கோபப்பட்ட ராஜீவ் சந்திரசேகர் ‘நீங்கள் எந்தச் சேனல்?” என்று அவர் கேட்க, அதற்கு அந்தப் பெண்மணி, தான் சி.பி.ஐ.(எம்)-இன் அதிகாரபூர்வ சேனலான ‘கைரளி’யில் பணிபுரிவதாக கூறுகிறார். இதை கேட்டதும், சந்திரசேகர் ஆக்ரோஷமாக, “நீ கேள்வி கேட்கக்கூடாது” என்று ஒருமையில் பேசினார்,
 
சந்திரசேகரின் இந்த செயல், பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தற்கொலை செய்துகொண்ட அனில்குமார், ஒரு கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் நிதி நெருக்கடியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கைப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறக்கையில் திடீர் தீ.. நொடிப்பொழுதில் வெடித்து சிதறிய விமானம்! - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

சரக்கு ரயில் - பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து.. 11 பேர் பலி.. 20 பயணிகள் நிலை என்ன?

உதவி கேட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய காவல்துறை! - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

பெண்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமிரா.. ஓசூர் டாடா நிறுவனத்தில் பெரும் பதட்டம்..!

என் அப்பாவை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் திமுகவின் கைக்கூலிகள்: அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments