தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கும் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது என்பதும், குறிப்பாக தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த தகவலை சற்றுமுன் பார்த்தோம் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கேரள மாநில பாஜக பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் பின்வருமாறு:
பாலக்காடு: மெட்ரோமென் ஸ்ரீதரன்
நேமம்: கும்மன் ராஜசேகரன்
திருச்சூர்: நடிகர் சுரேஷ் கோபி
கஞ்சரபள்ளி: அல்போன்ஸ் கண்ணன்தானம், முன்னாள் மத்திய அமைச்சர்
திரூர் தொகுதி: அப்துல் சலாம்
இரிஞ்சாலக்குடா: ஜேக்கப் தாமஸ், முன்னாள் டிஜிபி