Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

Mahendran
சனி, 3 மே 2025 (16:46 IST)
சிந்து நதிப் பகுதியில் இந்தியா அணை கட்டினால், அதனை அழித்து விடுவோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் வெளியிட்டுள்ள பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர், கவாஜா ஆசிஃப் ஒரு வெற்று அறிவிப்புத்துறை அமைச்சர் என்று கூறியுள்ளார்.
 
இந்தியாவின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமானது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தும் முயற்சி. சிந்து நதி, பாகிஸ்தானின் 80% விவசாய நிலங்களுக்கு நீர்வள ஆதாரமாக இருக்கிறது. இதனையடுத்து, "இந்தியாவின் ஒரு துளி நீர்கூட பாகிஸ்தானுக்கு செல்லாது" என மத்திய நீர்வள அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.
 
இந்த சூழலில் பாகிஸ்தான் அமைச்சர் கூறியதாவது, “இந்தியா சிந்து நதிப் படுகையில் அணை கட்டினால், அதை நாங்கள் அழித்து விடுவோம். இது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாகும்” என அவர் கூறியுள்ளார்.
 
இதற்கு பதிலடி அளித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன், “பாகிஸ்தான் அமைச்சர் வெறும் வாய் பேச்சுக்களே பேசுகிறார். அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இல்லாமல் வெற்றுஅறிவிப்புத் துறை அமைச்சர் போல இருக்கிறார். அவர்கள் தங்கள் பயம் மூலமே இவ்வாறு வெறுமனே அச்சுறுத்துகிறார்கள்” என்று விமர்சித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments