Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களிடையே பற்றி எரியுமா..? மதிமுகவுக்கு இந்த சின்னம் ஒதுக்கீடு.!

durai vaiko

Senthil Velan

, சனி, 30 மார்ச் 2024 (16:30 IST)
மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. மதிமுக பம்பரம் சின்னம் கோரியிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கியது. 
 
திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில்  போட்டியிட்டது. இந்த முறை அக்கட்சி சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
இந்த தேர்தலில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்தார்.  ஆனால் இந்த வழக்கு விசாரணையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை. 

 
இருப்பினும் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதில்  வைகோ உறுதியாக இருந்தார். இந்நிலையில் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வி.சி.க கட்சிக்கு பானை சின்னம் கிடைக்கும்- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்!