மிசோரமில் உள்ள சக்மா மாவட்ட கவுன்சிலை பாஜகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து நிர்வாக செய்ய உள்ளது.
மிசோரமில் உள்ள சக்மா இன மக்களுக்காக இயங்கும் தன்னாட்சி பொருந்திய சக்மா மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே பெரும்பாலும் மாநில தேர்தலிலும் வெற்றி பெறும்.
மொத்தம் 20 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் 19 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜக 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதிகாரத்தில் அமர 11 தொகுதிகளை கைபற்ற வேண்டும்.
இதனால் அதிகாரத்தை கைப்பற்ற பாஜகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி இரண்டு கட்சிகளுடன் கைக்கோர்க்க முன்வராத காரணத்தால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.