பிரபல கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் டீ குடிப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் மேற்கு வங்காளம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் யூசுப் பதான் மகிழ்ச்சியாக டீ குடித்துக் கொண்டிருக்கிறார் என பாஜக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூசுப் பதான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதிய நேரத்தில் நல்லதொரு டீ குடிப்பது அமைதியான சூழல் என்றும் இந்த தருணத்தில் மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறேன் என்றும் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவர் மட்டும் மகிழ்ச்சியாக டீ பருகுவது எந்த விதத்தில் நியாயம்? என பாஜக செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குவங்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, இந்துக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள், ஆனால் யூசுப் பதான் மகிழ்ச்சியாக டீ அருந்து கொண்டிருக்கிறார், இதுதான் திரிணாமுல் காங்கிரஸ் கொடுக்கும் முன்னுரிமை. மேற்குவங்கம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது யூசுப் பதான் டீ குடித்து மகிழ்ச்சியாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.