Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமரின் தாடியை கிண்டல் செய்து பேசுவது சரியல்ல! – காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்!

Advertiesment
National
, திங்கள், 5 ஜூலை 2021 (10:16 IST)
ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்த கருத்தில் காங்கிரஸ் பிரதமரை கிண்டல் செய்து பேசியது ஏற்புடையது அல்ல என்று பாஜக தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்திற்கு பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் விமானங்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறிவரும் காங்கிரஸ் மீண்டும் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சம்பில் பத்ரா “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விமானப்படை வலிமையை அதிகரிக்க முயலவில்லை. ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரங்களில் உள்ள நடைமுறைகளையும், ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்த தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம், உச்ச நீதிமன்றம் நற்சான்றுஅளி்த்துள்ளன. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தொடர்ந்து இதை பிரச்சினையாக்குவதும், பிரதமர் மோடியின் தோற்றம் மற்றும் தாடியை கிண்டல் செய்வதும் ஏற்புடையதல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வில்லேஜ் குக்கிங்: ஒருகோடி சப்ஸ்க்ரைபர் பெற்ற முதல் தமிழ் யூடியூப் சேனல்!