Webdunia - Bharat's app for daily news and videos

Install App

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

Siva
வியாழன், 5 ஜூன் 2025 (16:19 IST)
பிஜு ஜனதா தள் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினரான பினாகி மிஸ்ரா, திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மகுவா மோய்த்ராவை ஜெர்மனியில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 
65 வயதான மிஸ்ராவும், 51 வயதான மகுவா மோய்த்ராவும் மே 3ஆம் தேதி ஜெர்மனியில் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் ரகசியமாக வைத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அம்பலமாகியுள்ளது,
 
இருவரும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த நிலையில் இவர்களது நட்பு திருமணமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இவர்களது ஜெர்மனியின் பெர்லினில் நடந்ததாக மணமக்கள் தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.
 
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மகுவா மோய்த்ரா, முன்னதாக அமெரிக்க நிதி நிறுவனம் ஜேபி மோர்கன் & சேஸில் வேலை பார்த்து, அங்கு துணைத் தலைவராகவும் இருந்தார். அவருடைய முதல் திருமணம் டென்மார்க்கைச் சேர்ந்த நிதி நிபுணர் லார்ஸ் பிரோர்சனுடன் நடந்தது. பின்னர் அவர்கள் பிரிந்தனர்.
 
அதேபோல் பினாகி மிஸ்ராவின் முதல் திருமணம் ஒடிஷாவைச் சேர்ந்த சங்கீதா மிஸ்ராவுடன் நடந்தது. அவர்களும் விவாகரத்துக்குப் பிறகு பிரிந்துள்ளனர்.
 
மகுவாவும் பினாகியும் இருவரும் காங்கிரஸ் கட்சியில் தான் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கினர். மகுவா 2009ஆம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார், பின்னர் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். பினாகி 1996ஆம் ஆண்டு காங்கிரஸில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் பிஜேடியில் சேர்ந்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments