பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் குறைந்த விலையில் சிறிய ரக விமானம் ஒன்றை தயாரித்து இயக்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
விமானங்கள் ஏழைகளுக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வதற்கு மட்டுமே விமானத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் குறைந்த விலையில் அவரே சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்கியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலின்படி, பீகாரை சேர்ந்த அவனிஷ் குமார் என்ற இளைஞர் சில பயன்படுத்தப்படாத உலோக பொருட்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி ஒரு சிறிய ரக விமானத்தை உருவாக்கியுள்ளார். இதற்காக ரூ.7 ஆயிரம் மட்டுமே அவர் செலவு செய்ததாக கூறப்படுகிறது. அந்த விமானத்தை ஒரு திறந்த வெளி மைதானத்தில் அவர் பரிசோதித்த காட்சியை காண ஏராளமானோர் குவிந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
Edit by Prasanth.K