பீகாரில் பயணிகள் ரயில் தடம்புரண்டு கோர விபத்து.. உதவிக்கு ஓடி வந்த கிராமத்தினர்..!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (07:24 IST)
பீகாரில் பயணிகள் ரயில் தடம்புரண்டு கோர விபத்தில் 4 பேர் பலியானதாகவும், பலர்  காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பீகார் ரயில் விபத்து குறித்த தகவல்களை அறிய உடனே உதவி எண்களை ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மத்திய அமைச்சர் விரைந்துள்ளார்.

பீகார் ரயில் விபத்தில் போதிய வெளிச்சம் இன்மையால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள பொதுமக்கள் செல்போன் மற்றும் டார்ச் லைட் கொடுத்து உதவியதால் அந்த உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்தால் தடம் புரண்ட பெட்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் இரு திசையிலும் ரயில் சேவை கடும் பாதிப்பு அடைந்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்.. இன்று மஞ்சள் எச்சரிக்கை..

அடிப்படை அறிவு வேணும்.. கூட இருக்கிறவங்களுக்கே ஒன்னும் செய்யல.. விஜயை விமர்சித்த ராஜகுமாரன்

தொடர் முயற்சியில் தவெக... புதுச்சேரியில் விஜயின் ரோட் ஷோ நடக்குமா?....

காலை உணவுக்காக டிகே சிவகுமார் வீட்டுக்கு சென்ற சித்தாராமையா.. இருவரும் சமரசமா?

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments