பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்திலுள்ள முபாரக்பூர் கிராமத்தில்  ஒரு திருமணம் நடைபெறும்போது கட்டிட மாடியில் ஏறி குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
 
									
								
			        							
								
																	பீகார் மாநிலம் சப்ரா மாவட்டம் முராக்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நிஷா. இப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
 
									
										
			        							
								
																	மணமேடையில், சக்ரா நகரின் பிண்டோலியின் வசிக்கும் ஜக்மோகன் மஹதொஅவின் மகன் ராஜேஸ்குமார் மணமகனாக நின்று கொண்டிருந்தார்.
 
									
											
									
			        							
								
																	மணமகன், மணமகள் இருவரும் மணமேடைக்கு வந்து மாலை அணிவித்துக் கொண்டனர். அங்கு உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கூடியிருந்தனர்.
 
									
			                     
							
							
			        							
								
																	அப்போது, ஒரு பெண் திருமணம் நடைபெறும் கட்டிடத்தின் மாடியில்  ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும்,  மணப்பெண்ணின் தங்கை புதுல்குமாரி ஆவார். ராஜேஸ்குமாரை தனக்கு திருமணம் செய்துவைக்க வேண்டுமென்று ரகளை செய்தார்.
 
									
			                     
							
							
			        							
								
																	இதனால், வீட்டில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்சனையை தீர்க்க பேசினர். புதுல்குமாரிக்கும் ராஜேஷ்கும் முதலிலேயே காதல் இருந்தது தெரியவந்ததால், இருகுடும்பத்தினரும் பேசி,  இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர்.
 
									
			                     
							
							
			        							
								
																	இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.