Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பா குடிக்கிறார்.. நான் நல்லா படிக்கணும்.. உதவுங்க..! – முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுவன்!

Advertiesment
books
, திங்கள், 16 மே 2022 (12:18 IST)
பீகாரை சேர்ந்த 6ம் வகுப்பு சிறுவன் தனக்கு நல்ல பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்து தருமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது வைரலாகியுள்ளது.

பீகாரை சேர்ந்த பள்ளி மாணவன் சோனுக்குமார். அங்குள்ள பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படிக்கும் சோனுக்குமார் படிக்க வசதியில்லாமல் தவித்து வருகிறார். இதனால் அப்பகுதியில் உள்ள நர்சரி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டியூசன் நடத்தி அதன் மூலம் வரும் வருவாய் கொண்டு படித்து வந்துள்ளார்.

ஆனால் சமீபமாக அந்த பணத்தையும் தனது தந்தை எடுத்து சென்று மது அருந்திவிடுவதாக கூறி வருந்திய அந்த சிறுவன் தனக்கு படிக்க ஆசை இருப்பதாகவும், தனக்கு நல்ல பள்ளியில், நல்ல கல்வி கிடைக்க முதல்வர் உதவ வேண்டும் என்றும், பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு அச்சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளவில் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!