Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு

Advertiesment
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு
, வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (08:12 IST)

பீகாரில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்புக்குழுவினர்  பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடும்படி அரசு எவ்வளவு தான் கூறினாலும் இதனை பலர் கேட்பதில்லை. இதனால் விவரம் அறியாத குழந்தைகள் அதில் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது.
 
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில்  3 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த 110 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது. உடனடியாக இதுகுறித்து மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், குழந்தையை மீட்க தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். குழாய் வழியாக குழந்தைக்கு ஆக்‌ஷிஜன் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
webdunia
இந்நிலையில் விடாமல் தொடர்ந்து 26 மணிநேர முயற்சிக்குப் பின் குழந்தை பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்: அதிர்ச்சியில் அதிமுக தலைமை