Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீகார் தேர்தலில் ராகுல் முழுக்கவனம் செலுத்தவில்லை – ராஷ்டிரியா ஜனதா தளம் குற்றச்சாட்டு!

பீகார் தேர்தலில் ராகுல் முழுக்கவனம் செலுத்தவில்லை – ராஷ்டிரியா ஜனதா தளம் குற்றச்சாட்டு!
, திங்கள், 16 நவம்பர் 2020 (16:17 IST)
பீகார் தேர்தலில் ராகுல் காந்தி முழுக்கவனம் செலுத்தவில்லை என காங்கிரஸ் கூட்டணிக் கட்சி தெரிவித்துள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28 தொடங்கி மூன்று கட்டமாக நவம்பர் 7 வரை நடைபெற்றது. இதில் பாஜக இடம்பெற்ற  தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் காங்கிரஸின் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தேர்தல் தோல்விக்கு காங்கிரஸைக் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி, ’காங்கிரஸ் 70 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். ஆனால் 3 நாட்கள் மட்டுமே ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். பிரியங்கா காந்தி வரவே இல்லை. பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்த போது ராகுல்காந்தி சிம்லாவில் பிரியங்கா காந்திக்கு சொந்தமான இடத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். இப்படிதான் காங்கிரஸ் செயல்படுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிஸ்கோத்: சினிமா விமர்சனம் - சந்தானம், மொட்டை ராஜேந்திரன் , லொள்ளு சபா மனோகர் கூட்டணி எப்படி?