Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொதிக்கும் வெந்நீரை போலீஸ் மேல் ஊற்றிய டி.ஐ.ஜி!

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (13:50 IST)
பீகாரில் வெந்நீர் சூடாக இருந்ததால் அதை காவலர் மீது டி.ஐ.ஜியே ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் ராஜ்கிர் மாவட்டத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மையத்தில் டி.ஐ.ஜியாக பணிபுரிந்து வருபவர் டி.கே.திரிபாதி. நேற்று முன்தினம் போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ள உணவகத்திற்கு சென்ற அவர், பணியில் இருந்த அமோல் காரத் என்னும் காவலரிடம் வெந்நீர் எடுத்து வர சொல்லியிருக்கிறார். காரத் பிளாஸ்க்கில் இருந்த வெந்நீரை அவருக்கு ஊற்றிக் கொடுத்திருக்கிறார்.

வெந்நீர் சூடாக இருப்பதை கவனிக்காமல் டி.ஐ.ஜி வாயில் ஊற்றிக் கொண்டதால் அவரது வாய் வெந்தது. இதனால் கோபமடைந்த திரிபாதி வெந்நீர் கொண்டு வந்த கார்த்தை அழைத்து திட்டியுள்ளார். பதிலுக்கு காரத்தும் விவாதம் செய்யவே ஆத்திரமடைந்த திரிபாதி கொதிக்கும் வெந்நீரை காரத் முகத்தில் வீசியுள்ளார்.

இதனால் முகம் வெந்த அமோல் கராத்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திரிபாதியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸார் இடையே ஏற்பட்ட இந்த மோதல் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments