Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லட்சத்தீவில் இலவசமாக சுற்றி பார்க்க சூப்பரான சுற்றுலா பகுதிகள்!

Lakshadweep

Prasanth Karthick

, வியாழன், 11 ஜனவரி 2024 (12:30 IST)
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்திற்கு பின் ஏராளமானோர் லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்குள்ள இலவசமாக சுற்றக் கூடிய சூப்பரான சில சுற்றுலா தளங்கள் குறித்து பார்ப்போம்.



அரபிக்கடலில் கேரளாவிலிருந்து 200 முதல் 300 கி.மீ தொலைவில் கடலில் அமைந்துள்ள 36 தீவுகள் கொண்ட தொகுப்புதான் லட்சத்தீவுகள். இந்தியாவின் யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள லட்சத்தீவுகள் இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். லட்சத்தீவின் ஒவ்வொரு தீவிலும் வித்தியாசமான கடற்கரைகள் ஸ்கூபா டைவிங், ஸ்கேட்டிங் என நீர் விளையாட்டுகள் செய்வதற்கும், இளைப்பாறவும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பகுதிகளாகும். பெரும்பாலும் லட்சத்தீவுகளில் உள்ள தீவுகளில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல கட்டணம் இல்லை. ஆனால் தீவு விட்டு தீவு படகுகளில் பயணிப்பது, அக்குவாரியம் மற்றும் மற்ற நீர் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் உண்டு.

மிலிகு தீவு

webdunia


லட்சத்தீவுகளின் மையப்பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவுதான் மிலிகு (Minicoy Islands). இந்த தீவு லட்சத்தீவுகளில் உள்ள பல தீவுகளுக்கு செல்ல நடு முனையமாக உள்ளது. இயற்கையின் அழகிய பகுதிகளை காணவும், கடற்கரையில் ஓய்வு எடுக்கவும், படகுகளில் பயணிக்கவும் சிறப்பான பகுதிகளில் மிலிகு தீவு முக்கியமானது.

கட்மட் தீவு

webdunia


மீன்வளம் அதிகம் நிறைந்த இந்த கட்மட் தீவின் பிரதான தொழிலே மீன் பிடிப்பதுதான். அதனால் இந்த தீவில் மீன் வகை உணவுகள் வெகு பிரசித்தி பெற்றவை. இங்கு கிடைக்கும் விதம் விதமான மீன் உணவுகளை ருசி பார்ப்பதற்காகவே பலரும் கட்மட் தீவுக்கு செல்வது உண்டு. மேலும் இந்த கட்மட் தீவு பகுதியில் ஸ்கூபா டைவிங் செய்யவும் வசதி உள்ளது.

கவரட்டி தீவு

webdunia


லட்சத்தீவுகளில் ஓரளவு பெரிய தீவுகளில் கவரட்டி தீவும் ஒன்று. இயற்கை அழகு மிகுந்த கவரட்டி தீவில் வனத்திற்குள் சிறு ட்ரெக்கிங் செய்து வருவது நல்ல அனுபவமாக இருக்கும். மேலும் கடற்கரையில் காலாற நடந்து உலா வரலாம்.

ஆழ்கடல் பூங்கா

webdunia


கவரட்டி தீவில் உள்ள ஆழ்கடல் பூங்கா பலரும் விரும்பும் ஒரு சுற்றுலா பகுதியாகும். இங்கு கடல் உயிரினங்கள் பலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான மீன் வகைகள், ஆக்டோபர், நட்சத்திர மீன்களை உயிருடன் இங்கே காண முடியும். மேலும் பெரிய சுறா மீன் ஒன்றின் எலும்புக்கூடும் மியூசியத்தின் நடுவே நிறுவப்பட்டுள்ளது.

பிட்டி பறவைகள் சரணாலயம்

webdunia


லட்சத்தீவுகளில் உள்ள பிரபலமான பறவைகள் சரணாலயம் இந்த பிட்டி சரணாலயம். கால்பெனி தீவிலிருந்து மிக அருகில் உள்ள இந்த தீவில் ஏராளமான பறவைகள் வலசை போகும்போதும் மற்ற சீசன் நாட்களிலும் தங்கி செல்கின்றன. இங்கு சென்றால் பல வகை பறவைகளையும் கண்டு ரசிக்க முடியும்.

அமினி கடற்கரை

webdunia


ஸ்கூபா டைவர்களின் சொர்க்க பூமிதான் அமினி கடற்கரை. இங்கு கரையில் அமைதியாக படுத்து ஓய்வெடுத்துக் கொண்டே கண்ணாடி போல பிரதிபலிக்கும் கடலில் சுற்றிதிரியும் மீன்களை ரசிக்கலாம். அல்லது ஸ்கூபா டைவிங் செய்து கடலுக்குள் சென்று அழகிய பவளப்பாறைகளியும், மீன் இனங்களையும் மிக அருகே சென்று ரசிக்கலாம்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மத்திய அமைச்சர் பதவி.. தூண்டில் போடும் பாஜக.. சிக்குமா அதிமுக?