மெட்ரோ ரயில் மூலம் எடுத்து செல்லப்பட்ட இதயம்.. 20 நிமிடத்தில் 7 ரயில் நிலையங்களை கடந்தது..!

Mahendran
சனி, 13 செப்டம்பர் 2025 (11:43 IST)
பெங்களூருவில், நேற்று இரவு, ஒரு மனித இதயம் முக்கியமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயில் மூலம் 20 நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்டது. 
 
பெங்களூருவில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனை குழுவினர், இதயத்தை யஷ்வந்த்பூர் மெட்ரோ நிலையத்திலிருந்து, சவுத் பரேட் கிரவுண்ட் மெட்ரோ நிலையத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இந்த இரு நிலையங்களுக்கும் இடையிலான தூரத்தை வெறும் 20 நிமிடங்களில் மெட்ரோ ரயில் கடந்து சாதனை படைத்தது.
 
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) வெளியிட்ட அறிக்கையின்படி, இதயம் இரவு 11:01 மணிக்கு யஷ்வந்த்பூர் மெட்ரோ நிலையத்தில் எடுத்து செல்லப்பட்டு, 11:21 மணிக்கு மந்த்ரி சதுக்கம் சம்பிகே சாலை மெட்ரோ நிலையத்தை அடைந்தது. இந்த 20 நிமிட பயணத்தில், மெட்ரோ ஏழு நிலையங்களை கடந்தது.
 
மெட்ரோ அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் இணைந்து செயல்பட்டு, இதயம் பாதுகாப்பாகவும், தடையின்றியும் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்தனர்.
 
இதுகுறித்து BMRCL வெளியிட்ட அறிக்கையில், "உயிர்காக்கும் பயணங்களுக்கு திறமையான மற்றும் சரியான நேரத்தில் போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதன் மூலம் மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட BMRCL உறுதிபூண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை.. மொத்த மதிப்பு ரூ.9.5 கோடி..!

கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றபோது நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments