சைடிஷ் சரியாக வழங்கவில்லை என தகராறு.. பார் ஊழியர் குத்தி கொலை..!

Siva
செவ்வாய், 22 ஜூலை 2025 (08:19 IST)
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பாரில் சைடிஷ் சரியாக வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் பார் ஊழியர் ஒருவர் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சம்பவத்தன்று சிஜோ என்பவர் அந்த பாருக்கு மது அருந்த வந்துள்ளார். அங்கு பார் ஊழியர் ஹேமச்சந்திரன் அவருக்கு சைடிஷ் பரிமாறியுள்ளார். அப்போது, சைடிஷ்  சரியாக வழங்கப்படாதது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
 
இந்த வாக்குவாதம் முடிந்த நிலையில், பார் நேரம் முடிந்தவுடன் ஹேமச்சந்திரன் பாரை மூடிக்கொண்டிருந்தார். அப்போது மீண்டும் திரும்பி வந்த சிஜோ, திடீரென கத்தியை எடுத்து ஹேமச்சந்திரனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ஹேமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த சிஜோவை போலீசார் கைது செய்து, காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கொலைக்கு வேறு ஏதேனும் பழைய பகை காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments