பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இன்றும் நாளையும் வக்கிகள் நடத்த இருந்த வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் இன்றும் நாளையும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் போராட்டத்தில் ஈடுபட இருந்தது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த போராட்டத்திற்கு தடை விதித்தது.
இதனையடுத்து வங்கிகள் அறிவித்திருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் நேற்று அறிவித்தது.