ஒரு பக்கம் பாகிஸ்தான், இந்தியாவுக்குள் ஊடுருவி தீவிரவாதத்தை வளர்த்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்திய குடிமகன் போலவே வாழ்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் வைத்திருக்கும் வங்கதேசத்தினரை கண்டுபிடித்து கைது செய்து வரும் நிலையில், தற்போது மேலும் சில கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய 250 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதேபோல் ஹரியானா மாநிலத்தில் 237 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இன்னும் நாடு முழுவதும் உள்ள சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.