Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறக்கும்போதே லட்சாதிபதியாக பிறந்த பெங்களூர் குழந்தை

பிறக்கும்போதே லட்சாதிபதியாக பிறந்த பெங்களூர் குழந்தை
, செவ்வாய், 2 ஜனவரி 2018 (05:33 IST)
நேற்றைய புத்தாண்டு தினத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் முதல் குழந்தைக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று பெங்களூர் மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நேற்று  நேற்று பெங்களூரு ராஜாஜிநகர் பாஷியம் சர்க்கிள் பகுதியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் கோபி–புஷ்பா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. இந்த குழந்தை நேற்று நள்ளிரவு சரியாக 12.05–க்கு பிறந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து பெங்களூர் மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் கூறியதாவது: “பெங்களூரு மாநகராட்சி சார்பில் முதல் முறையாக, அரசு மருத்துவமனையில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த ரூ.5 லட்சம் பரிசு, அந்த குழந்தையின் கல்வி செலவுக்கு பயன் உள்ளதாக இருக்கும். அந்த தொகையை வங்கியில் செலுத்தி, அதன்மூலம் கிடைக்கும் வட்டியை குழந்தையின் படிப்பு செலவுக்கு பெற்றோர் பயன்படுத்தலாம். மேற்படிப்புக்கும் அந்த தொகை உதவியாக இருக்கும் என்று கூறினார்.

பிறக்கும்போது ரூ.5 லட்சம் பெற்று லட்சாதிபதியாக மாறிய இந்த குழந்தையின் தாய் புஷ்பா இதுகுறித்து கூறும்போது, ‘நான் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவள். எனது குழந்தை மிகுந்த அதிர்ஷ்டசாலி ஆவாள். அவள் பிறந்ததும் ரூ.5 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள ரூ.5 லட்சத்தை, எனது குழந்தையின் படிப்புக்காக மட்டுமே செலவு செய்வேன். அந்த பணத்தை வேறு எதற்காகவும் பயன்படுத்த போவதில்லை. எனது குழந்தையை ஐ.ஏ.எஸ். படிக்க வைப்பேன். அதுதான் எனது ஆசை ஆகும். அவள் ஐ.ஏ.எஸ். படிக்க இந்த பணம் பயன் உள்ளதாக இருக்கும்‘ என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு! இனி எம்.ஆர்.பி விலை அவசியம்