Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூரு மெட்ரோ கட்டுமான பணியின் போது விபத்து: தாய், மகன் பரிதாப பலி!

bangalore metro
, செவ்வாய், 10 ஜனவரி 2023 (14:36 IST)
பெங்களூரு மெட்ரோ கட்டுமான பணியின் போது விபத்து: தாய், மகன் பரிதாப பலி!
பெங்களூர் மெட்ரோ பணிகளின் போது ஏற்பட்ட விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது மகன் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெங்களூரில் தற்போது மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கல்யாண் நகரிலிருந்து எச்ஆர்பிஆர் பகுதிவரை மேம்பாலத்திற்கு தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில்  மெட்ரோ பாதைக்கான தூண் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இதில் ஏற்பட்ட இடிபாடுகள் காரணமாக தாய் மற்றும் அவரது இரண்டு வயது மகன் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் இன்னொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த விபத்து குறித்த தகவல் தெரிந்தவுடன் உடனடியாக போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். மேலும் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல.. ஒரு ராக்கெட் கூட ஏவமுடியாத சோகத்தில் இங்கிலாந்து!