Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடாவடி செய்த எம்.பி.க்கு சிக்கல் - விமானத்தில் செல்ல தடை

அடாவடி செய்த எம்.பி.க்கு சிக்கல் - விமானத்தில் செல்ல தடை
, வெள்ளி, 16 ஜூன் 2017 (12:22 IST)
ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சி எம்.பி. திவாகர ரெட்டிக்கு, விமானத்தில் செல்ல பல்வேறு விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.


 

 
எம்.பி. திவாகர ரெட்டி நேற்று ஐதராபாத் செல்ல இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்திருந்தார். அந்த விமானம் 8.10 மணிக்கு புறப்பட இருந்தது. ஆனால், விசாகபட்டணம் விமான நிலையத்திற்கு அவர் சற்று தாமதமாக வந்தார். 
 
விமான நிலையத்தின் கதவுகள் மூடப்பட்டதால், இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாது, அடுத்த விமானத்தில் செல்லுங்கள் என அதிகாரிகள் கூறினர். இதனால் கோபமடைந்த அவர் விமான நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், கோபத்தில் அங்கிருந்த கனினி மற்றும் ஃபேக்ஸ் எந்திரங்களை கீழே தள்ளிவிட்டார். இவை அனைத்தும் அங்கிருக்கும் சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது. 
 
அதன் பின்னர் அவர் அதே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால், இண்டிகோ விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் ஊழியருடன் தகாத முறையில் நடந்து கொண்ட எம்.பி.திவாகர் ரெட்டி, இனிமேல் எங்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என கூறியுள்ளது. 
 
இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட பல விமான சேவை நிறுவனங்களும், திவாகர் ரெட்டி தங்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்துள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன கிராமத்தில் தனியாய் வாழும் மனிதர்: காரணம் என்ன?