ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதையத்து இந்த ஆண்டு தொடங்கத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், கொரொனா இரண்டாம் அலை பரவியது.
விரைவில் கொரொனா 3வது அலை பரவும் அபாயமுள்ளதாக அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு பயன்பாடு மற்றும் விற்பனைக்குத் தடை விதித்து ராஜஸ்தான் அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி அரசு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்புக்கு தடை விதித்துள்ள நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையான ராஜஸ்தான் மாநில அரசு இதை அறிவித்துள்ளது.