டெல்லியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பது போன்ற போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மல்யுத்த சம்மௌனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த பல வாரமாக தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நேற்று போலீஸாரால் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் கைது செய்யப்பட்ட வாகனத்தில் இருந்து சிரித்துக் கொண்டே செல்பி எடுத்தது போன்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் உண்மையான புகைப்படத்தையும் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ள மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா “இந்த புகைப்படங்களை ஐடி செல் பரப்பி வருகிறது. இதனை பதிவிட்ட நபர் மீது புகார் அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.