பஜாஜ் நிறுவனத்தின் மின்சார வாகன தொழிற்சாலை: எங்கே தெரியுமா?
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	வருங்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுகு மாற்றாக மின்சார வாகனங்கள் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஓலா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது பஜாஜ் நிறுவனம் ரூபாய் 300 கோடி ரூபாய் மதிப்பில் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது..
 
									
										
			        							
								
																	
	 
	புனே பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 5 லட்சம் மின்சார வாகனங்களை தயாரிக்கும் என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்
 
									
											
							                     
							
							
			        							
								
																	இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைக்கு உண்டான மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படும் என்றும் இந்த புதிய தொழிற்சாலை காரணமாக 800க்கும் அதிகமான ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அடுத்த ஆண்டு ஜூன் முதல் மின்சார வாகன உற்பத்தி தொடங்கும் என்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது