அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் நீட்டிப்பு !

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:42 IST)
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் நீரவ் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார்.

இது சர்ச்சையான நிலையில், இது குறித்து பாஜக அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.

நாட்டில் பேசுபொருளாகியுள்ள இந்த வக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், ராகுல்காந்திக்கு வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments