Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர்களுக்கே பின்னடைவு.. நட்சத்திர வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (11:24 IST)
5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வரும் நிலையில் முதல்வர் வேட்பாளர்கள் சில இடங்களில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.



மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் மிசோரம் தவிர மீத 4 மாநிலங்களுக்கும் இன்று வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இதில் தெலுங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ் (39) கட்சியை ஒப்பிடுகையில் காங்கிரஸ் (70) முன்னிலையில் உள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே பின்னடைவை சந்தித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தான் போட்டியிட்ட சர்தார்புரா தொகுதியில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் ஸ்டார் வேட்பாளரான சச்சின் பைலட் தான் போட்டியிட்ட டோங்க் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். சத்தீஸ்கர் முதல்வரான பூபேஷ் பாகல் தான் போட்டியிட்ட பதான் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments