சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக 54 தொகுதிகளிலும் காங்கிரஸ் 51 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 60 தொகுதிகளிலும் காங்கிரஸ் 51 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 42 தொகுதிகளிலும் பாஜக 31 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் ஆளும் பிஆர்எஸ் 21 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.