Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இராணுவ வீரர்கள் மீது தாக்குதல்.! பெண் தோழி கூட்டு பாலியல் வன்கொடுமை.! ராகுல் காந்தி கண்டனம்..!!

Advertiesment
Ragul Gandhi

Senthil Velan

, வியாழன், 12 செப்டம்பர் 2024 (16:41 IST)
மத்தியப் பிரதேசத்தில் இரு இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களின் பெண் தோழி கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருப்பது தேசத்தையே இழிவுக்குள்ளாக்கிய சம்பவம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
 
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் பயிற்சி பெற்று வந்த இரு இராணுவ வீரர்கள், நேற்று மாலை இரு பெண் தோழிகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 8 பேர் இராணுவ வீரர்களையும், அவர்களது பெண் தோழிகளையும் தாக்கிய  பணத்தை பணத்தை பரித்தனர். மேலும் இரு பெண்களில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்தியப் பிரதேசத்தில் இரு இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களின் பெண் தோழி கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருப்பது, தேசத்தையே இழிவுக்குள்ளாக்கிய சம்பவம் என்று விமர்சித்துள்ளார்.
 
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்ட ஒழுங்கே இல்லாமல் போய்விட்டது போல் இருக்கிறது என்றும் பா.ஜ.க ஆட்சியின் கீழ் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த சமூகமும், அரசும் தலைகுணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

 
இது குறித்த தீவிர சிந்தனை அனைவருக்கும் வேண்டும் என்றும் இது போன்ற கொடூர நடவடிக்கைகளிலிருந்து மீண்டு வர வேண்டும் என்றும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!