Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

Advertiesment
ATM

Prasanth Karthick

, திங்கள், 19 மே 2025 (12:10 IST)

தெலுங்கானாவில் ஏடிஎம் ஒன்றில் அதிகமான பணம் வெளிவந்ததால் மக்கள் பணம் எடுக்க குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தெலுங்கானாவின் ஐதராபாத்தில் யாகுத் புரா என்ற பகுதியில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. நேற்று அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் ரூ.3000 எடுப்பதற்காக கார்டை போட்டுள்ளார். ஆனால் அவருக்கு இன்ப அதிர்ச்சியாக ரூ.4 ஆயிரம் பணம் வந்துள்ளது. அவரது வங்கி கணக்கிலும் ரூ.3 ஆயிரம் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது.

 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் ஏடிஎம் கார்டுகளை எடுத்துக் கொண்டு அங்கு ஓடியுள்ளனர். பலரும் தங்களிடம் இருந்த பணத்தை விட ரூ.1000 கூடுதலாக ஏடிஎம் மூலம் பெற்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்களிடையே தள்ளுமுள்ளும் நடந்துள்ளது.

 

சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீஸார் தடியடி நடத்தி மக்களை அங்கிருந்து அகற்றியுள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் வந்து ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்ததில் அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து ஏடிஎம்மை அதிகாரிகள் பூட்டினர். அந்த ஏடிஎம்மிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!