டெல்லியில் காற்று மாசு காரணமாக சுமார் 4 லட்சம் பழைய நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த விதமாக ஒற்றைப்படை பதிவு எண் மற்றும் இரட்டைப்படை பதிவு எண் குறிப்பிட வார நாட்களில் மட்டும் இயங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதோடு, டெல்லியில் உள்ள அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாசு கட்டுக்குள் வராத காரணத்தால், 10 ஆண்டுகளுக்கு முந்தைய டீசல் நான்கு சக்கர வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு முந்தைய பெட்ரோல் நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.