காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவியவர்களின் சொத்துக்களை அம்மாநில காவல்துறை பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவி செய்த நூற்றுக்கணக்கானோட் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
மேலும் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால் அவர்கள் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சொத்துக்களை இழந்தவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு உதவி செய்யும் 4200 பேர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 990 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.