Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் மூழ்கிய 222 கிராமங்கள்! – அசாமை உலுக்கிய வெள்ளப்பெருக்கு!

Webdunia
திங்கள், 16 மே 2022 (10:31 IST)
அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 200க்கும் அதிகமாக கிராமங்கள் மூழ்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதுவரை சுமார் 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அதானி நிறுவனத்திற்கும் தமிழக மின்வாரியத்திற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்றிரவு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கஸ்தூரியை பிடிக்க முடிந்த போலீசால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? செல்லூர் ராஜு

முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments