ஒரு கிலோ தேயிலை ரூ.99,999க்கு ஏலம்: அப்படி என்ன இருக்கு?
ஒரு கிலோ தேயிலை ரூ.99,999க்கு அதாவது ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு ரூபாய் மட்டுமே குறைவாக ஏலம் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அசாம் மாநிலம் கவுஹாத்தி தேயிலைக்கு புகழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் தரம் நிறைந்த தேயிலை ஏலம் நடைபெற்றது
இந்த ஏலத்தில் தரம் மணம் குணம் நிறைந்த தேயிலை என்ற ஒருவகை ஏலத்திற்கு வந்தது. அந்த தேயிலையை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். கடைசியில் ஒரு கிலோ தேயிலை ரூ.99,999 ரூபாய்க்கு விற்பனையானது
தரம், மணம் குணம் நிறைந்த தேயிலை என்பதால் அதிக விலைக்கு விற்பனை ஆனதாக தேயிலை ஏல விற்பனையாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது