Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா கடத்தல்காரர்களுக்கு போலீசார் பதிவு செய்த நையாண்டி டுவீட்!

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (09:03 IST)
590 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய அசாம் மாநில போலீசார், அந்த கஞ்சாவை கடத்திய மர்ம நபர்களுக்கு டுவிட்டர் பக்கத்தில் ஒரு நையாண்டியான டுவீட்டை பதிவு செய்துள்ளனர்.
 
அசாம் மாநிலத்தில் போதைபொருட்களின் கடத்தல் அதிகரித்து வருவதை அடுத்து அசாம் போலீசார் கடந்த சில நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் கெளஹாத்தி உள்பட ஒருசில நகரங்களில் இருந்து 590 கிலோ போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்து மாத்திரை வடிவில் கஞ்சா, ஹெராயின் ஆகியவை இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை
 
இந்த நிலையில் போதை பொருட்களை கடத்தியவர்களுக்கு ஒரு மெசேஜாக அசாம் போலீசார் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளனர். அதில் '590 கிலோ போதை பொருளை தொலைத்து விட்டீர்களா? யாரும் தேட வேண்டாம்... எங்களிடம் தான் உள்ளது... வந்து பெற்று கொள்ளவும் என்று நையாண்டியாக ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளனர்.
 
இந்த டுவீட்டுக்கு பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் போதைப்பொருட்களை கைப்பற்றிய அசாம் போலீசார்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி.. காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கண்டனம்..!

விமானம் பறப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்ததால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்..!

மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments