Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலைஞர் பிறந்தநாளிலும் விடாது துரத்தும் ’நெட்டிசன்ஸ் ’ : அதிர்ச்சியில் திமுக...

Advertiesment
கலைஞர் பிறந்தநாளிலும் விடாது துரத்தும் ’நெட்டிசன்ஸ் ’ :  அதிர்ச்சியில் திமுக...
, திங்கள், 3 ஜூன் 2019 (16:34 IST)
தமிழக முன்னாள் முதல்வர் மற்றும்  முன்னாள் திமுக தலைவர்  கலைஞர் மு. கருணாநிதியின்  96 வது  பிறந்தநாள் இன்று. இதையொட்டி  திமுக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், கலைஞர்கள் என சகல தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்
மெரினாவில் உள்ள கலைஞர் சமாதியில் பிரபல அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் போன்றோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
webdunia
இந்நிலையில் தற்போது டுவிட்டரில் கருணாநிதியைக் குறித்த ஒரு ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதாவது #HBDFatherOfCorruption என்ற ஹேஸ்டேக் தற்போது வேகமாகப் பரவிவருகிறது.  இதனால் இதைப்பார்க்கும் திமுக கட்சியினர் என்ன செய்வது எனத் தெரியாமல் அதிர்சியில் உறைந்துபோய் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
webdunia
சமீபத்தில் தான் மக்களவைத் தேர்தலில் திமுக தமிழகத்தில் 38  தொதிகளில் வென்று, இந்தியாவில் 3வது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
webdunia
இந்நிலையில் பெருவாரியான மக்கள்  தம் கருத்துக்களை  இந்த டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலமைச்சரை பேட்டி எடுக்கும்போது மூக்கை பொத்திய ரிப்போர்ட்டரால் சர்ச்சை