Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலை 10 மணி முதல் 5 மணி வரை சாராயக் கடைகள்! அறிவித்த மாநில அரசு!

Advertiesment
அஸ்ஸாம்
, திங்கள், 13 ஏப்ரல் 2020 (09:49 IST)
இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சாராயக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இந்தியா இதுவரை 9000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சாராயக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனால் பல இடங்களில் குடிக்க முடியாமல் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து அஸ்ஸாம் மாநில அரசு, நாளை முதல் காலை 10 மணி முதல் 5 மணி வரை சாராயக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைக்கு வருபவர்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்றும் அஸ்ஸாம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியில் இருக்கும் மதுபான கடை ஊழியர்கள் சரக்கு வாங்க வரும் மதுப்பிரியர்களுக்கு சானிடைசரை வழங்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கம்மியாக உள்ள மாநிலங்களில் அஸ்ஸாமும் ஒன்று. அங்கு இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய வெளிநாட்டினர்! – நூதனமான தண்டனை கொடுத்த போலீஸ்!