Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா நோயாளிகளுக்கு உதவிய முகேஷ் அம்பானி

Advertiesment
கொரோனா நோயாளிகளுக்கு உதவிய முகேஷ் அம்பானி
, திங்கள், 26 ஏப்ரல் 2021 (23:11 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,   மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்குத் தேவையான உதவிகள் செய்வதற்குத்தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஃபெளண்டேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள 875 படுக்கைகள் அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் களமிறக்கியுள்ளது.

அதேபோல் ஓர்ளி என்ற பகுதியில் உள்ள தேசிய விளையாட்டு சங்கத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை  மருத்துவமனை சார்பில் கொரோனாவால் பாதிக்காப்பட்டவரக்ளுக்கு 650 படுக்கைகளை உருவாக்கி அதனைப் பார்த்துக் கொள்ளும் பணியை செய்துள்ளது.

மேலும், 100 புதிய ஐசியூ படுக்கைகளும்,  டிரெயிண்ட் விடுதியில்  100 படுக்கைகள் கொண்ட சேவையும், செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் 125 படுக்கைகள் கொண்ட 45 ஐசியூ படுக்கைகள்  அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் அறக்கட்டை செய்துவரும் உதவுக்கு பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு; தமிழகத்திற்கு சிக்கலா?