பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க இருப்பதாகவும், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்து, ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி இழந்த நிலையில், அடுத்த கட்டமாக பஞ்சாப் மாநிலத்திலும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏமாற்றம் அடைந்த எம்எல்ஏக்கள் 10 பேர் காங்கிரஸ் கட்சிக்கு மாறப் போவதாக கூறப்பட்ட நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கட்சியின் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்துள்ள நிலையில், பஞ்சாபில் உள்ள லூதியானா மேற்கு தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட போவதாகவும், இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் பஞ்சாப் மாநில முதல்வர் பதவியை ஏற்க இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆலோசனை இன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. டெல்லி முதல்வர் பதவி பறிபோனதை அடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வர் பதவியை ஏற்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுவது, பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.