Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 25 April 2025
webdunia

காதல் ஜோடி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது!

Advertiesment
noida
, வியாழன், 2 மார்ச் 2023 (17:21 IST)
நொய்டாவில் காதல் ஜோடி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மா நிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள நொய்டாவில் உள்ள ராகிணி பூங்காவில், நேற்று மாலையில், 20 வயதுடைய காதல் ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த சில இளைஞர்கள், காதல் ஜோடியுடன் தகராறு செய்து, அவர்களை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலரும் குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில், செக்டர் 49 காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு, சி.ஆர்.பி.சியின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், பரோலா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ராஜ், ரமேஷ் வர்மா ஆகிய இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்ற இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி பழனிசாமி, எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: நாஞ்சில் சம்பத்