Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சி தலைவர்களின் மொபைல் போன் ஹேக்.. எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பிய ஆப்பிள்..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (12:22 IST)
எதிர்க்கட்சி தலைவர்கள் ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான சசி தரூர் உள்ளிட்டவர்களின்  ஆப்பிள் ஐபோன் ஹேக் செய்யப்பட்டது. இது குறித்து ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உங்கள் ஐபோன் ஹேக் செய்யப்படுகிறது என மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கையை அனுப்பியுள்ளனர்.

சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் , திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா, சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த (யுபிடி) பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா எம்பி, காங்கிரஸ் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான பவன் கேரா மற்றும் தி வயர் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோருக்கு இந்த எச்சரிக்கை குறுஞ்செய்தி ஆப்பிள் நிறுவனத்தால் அனுப்பப்பட்டுள்ளது.  

இதனை அடுத்து சுதாரித்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது மொபைல் போனை ஹேக்கர்களிடம் இருந்து மீட்டு உள்ளனர்.. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் ஹேக்கர்களின் இந்த முயற்சிக்கு மத்திய அரசே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments