உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'ஆண்டி ரேப் கன்' பணப்பையை கண்டுபிடித்துள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெருநகரங்களில் தனியாக இருக்கும் பெண்கள் ஆண்களால் பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இவற்றை தடுப்பதற்காக வாரணாசியைச் சேர்ந்த ஷியாம் சவுராசியா என்பவர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ட்ரிகர் பொறுத்தப்பட்ட ஆண்ட்டி ரேப் கன் என்ற பணப்பையை தயாரித்துள்ளார்.
ப்ளூடுத் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த பணப்பையில் அவசர காலத்தில் பொத்தானை அழுத்தினால் தானாவே பெண்கள் பாதுகாப்பு மையத்தையோ அல்லது காவல் நிலையத்திற்கோ அழைப்பு சென்றுவிடும். மேலும் மோசமான சூழ்நிலையாக இருந்தால் அதிலு
ள்ள டிரிகரை அழுத்தினால் பயங்கர சத்தம் எழுப்பி அக்கம்பக்கத்தினரின் கவனத்தை ஈர்க்கும் எனவும் கூறியுள்ளார்.