Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான விபத்தை அடுத்து ஹெலிகாப்டர் விபத்து.. உள்ளே இருந்த அத்தனை பேரும் பலி..!

Siva
ஞாயிறு, 15 ஜூன் 2025 (09:19 IST)
கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து, நாட்டையே உலுக்கியது. அந்த விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் விமானம் விழுந்த கட்டிடத்தில் இருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விமான விபத்தின் அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது ஹெலிகாப்டர் விபத்து ஒன்று நடந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் மேலும் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் இருந்து கேதார்நாத் சென்ற ஒரு ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் என்ற வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

முதல் கட்ட தகவலின்படி, இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உட்பட அனைவரும் உயிரிழந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments