Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் மீண்டும் ஒரு இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயற்சி

Advertiesment
பினராயி விஜயன்
, வியாழன், 22 டிசம்பர் 2022 (20:46 IST)
சமீபத்தில், கேரள மாநிலம் திருவனந்தபுரம், பத்தனம் திட்டா அருகே இலந்தூர் என்ற பகுதியில் பத்மா, ரோஸ்லின் ஆகிய இரு பெண்களும் மூட நம்பிக்கையால் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அதேபோல்  தற்போது மீண்டும் ஒரு பெண்ணை  நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

பத்தனம் திட்டா என்ற மாவட்டத்தில் கர் நாடக மா நிலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கொச்சியில் உள்ள தனியார்  நிறுவனத்தி பணிபுரிந்து வரும் நிலையில்,  அவருக்கும், அம்பிளி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இளம் பெண்ணுக்கும் அவரது கண்வருக்கு இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க ஒரு மந்திரவாதியை சந்திக்கலாம் என அம்பிளி  அவரிடம் கூறியுள்ளளார்.

அதேபோல், அந்த மந்திரவாதியிடம் இளம்பெண்ணை அம்பிளி அழைத்துச் சென்றுள்ளார், அன்று நரபலி கொடுக்க முயற்சித்தபோது, மயக்கம் தெளிந்து இளம்பெண் தப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் போலீஸில் புகாரளித்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யன்கான் குறித்த பொதுநல வழக்கு: நீதிமன்றம் எச்சரிக்கை!