Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திறந்த வேகத்தில் மூடப்பட்ட பள்ளிகள்: ஆந்திராவில் 9 மாணவர்களுக்கு கொரோனா

Advertiesment
திறந்த வேகத்தில் மூடப்பட்ட பள்ளிகள்: ஆந்திராவில் 9 மாணவர்களுக்கு கொரோனா
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (12:00 IST)
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இரண்டு அரசுப்பள்ளிகளை சேர்ந்த 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மடினேபள்ளி பகுதியில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஆம், உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 8 மாணவர்களுக்கும், துவக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கும் கொரோனா உறுதி செய்யப்படதை தொடர்ந்து பள்ளிகளுக்கு 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மாணவர்கள் யாருக்கேனும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் இந்த விடுமுறை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் வீடியோ விவகாரம்; பாஜகவிலிருந்து கே.டி.ராகவன் திடீர் விலகல்!