Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆந்திரா ரயில் விபத்திற்கு காரணம் இதுதான்: ரயில்வே துறை அறிவிப்பு..!

Advertiesment
ஆந்திரா ரயில் விபத்திற்கு காரணம் இதுதான்: ரயில்வே துறை அறிவிப்பு..!
, செவ்வாய், 31 அக்டோபர் 2023 (08:10 IST)
ஆந்திர மாநிலத்தில் நேற்று நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி ஏற்பட்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்திற்கு ஓட்டுனர்களின் தவறே காரணம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

நேற்று நடந்த ரயில் விபத்தில் மூன்று பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் பல பயணிகள் காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.  இதனை அடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்டு பணியை தொடங்கினார் என்பதும் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்  மின்சார வயர் அறுந்து கிடந்ததால் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்ற ரயில் நிறுத்தப்பட்டதாகவும், ரயில் நிறுத்தப்பட்டது குறித்து ரயில் ஓட்டுநர் எந்தவிதமான தகவலும் தெரிவிக்கவில்லை என்றும்,  அதனால் தான் நின்று கொண்டிருந்த ரயில் மீது இன்னொரு பயணிகள் ரயில் மோதியதாகவும் முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ரயில் விபத்திற்கு இரண்டு ரயில்களின் ஓட்டுனர்களே காரணம் என்றும் அவர்கள் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இந்த நிலையில் இந்த விபத்தில் ஒரு ரயில் டிரைவர் இறந்துவிட்டதை அடுத்து இன்னொரு ரயில் டிரைவர் மற்றும் உதவி ரயில் டிரைவரிடம் மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்பு உள்ளதா? என்ஐஏ தீவிர விசாரணை..!