ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் பரிதாப பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று பாசஞ்சர் ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த ரயில் பாதையின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் நிலையில் அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த ரயில் விபத்தால் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டதாகவும் அதில் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டு காயமடைந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் முதலில் 9 பயணிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டாலும் சற்றுமுன் வெளியான தகவலில் உயிர் பலி 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.