பள்ளி கல்லூரிகள் உள்பட பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என புதுவை மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் புதுவை உள்பட நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகர் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களான கடற்கரை, சந்தை, திரையரங்குகள் ஆகிய்வற்றுக்கு வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பொதுமக்கள் முக கவசம் அணிவதை கடைபிடிக்காத பட்சத்தில் அபராதம் விதிப்பதை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதுவையில் கொரோனா பரிசோதனை செய்பவர்களில் 15 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகவும் தெரிவித்த அவர் அரசு ஊழியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்